Site icon TNPSC Academy

TNPSC Current Affairs in Tamil – Oct.20, 2016 (20/10/2016)

SAINA

[vc_row][vc_column][vc_column_text]

www.tnpsc.academy – TNPSC Current Affairs in Tamil – Oct.20, 2016 (20/10/2016)

 

Download as PDF

 

 

தலைப்பு : அரசியல் விஞ்ஞானம் – அண்டை நாடுகளுக்கு இடையே உள்ள உறவு

சீன – இந்திய ஒத்துழைப்பு 2016

இந்தியா மற்றும் சீனாவின் இரண்டாவது கூட்டு திட்டமிட்ட உடற்பயிற்சியான “சீன – இந்திய ஒத்துழைப்பு 2016” அண்மையில் அக்டோபர் 19, 2016 அன்று நடைபெற்றது. எல்லை பாதுகாப்பு கூட்டு ஒப்பந்தம் 2013 – ன் ஏற்பாடுகளின் கீழ், முதல் கூட்டுப் பயிற்சியை தொடர்ந்து இந்த பயிற்சி நடைபெற்றுள்ளது.

உடற்பயிற்சி பற்றி:            

இந்த உடற்பயிற்சி, ஒரு மனிதாபிமான உதவியின் அடிப்படையிலும் மற்றும் பூகம்ப நிவாரணதிற்கு உதவுவதில் அடிப்படையிலும் (HADR) மற்றும் ஒரு கற்பனையான நிலைமையை உருவாக்கி அதில் இந்திய எல்லைக் கிராமங்களில் நிலநடுக்கம் போன்ற நிலைமையை உருவாக்கி பயிற்சியளிக்கிறது. அதன் பின்னர் இணைப்புக் குழு மீட்பு நடவடிக்கைகளில் மருத்துவ உதவி வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.

இந்தியா மற்றும் சீனாவின் முதல் கூட்டுப் உடற்பயிற்சி:

இந்த பயிற்சி, கிழக்கு லடாக் பகுதியில் Chushul ராணுவப்பகுதியுடன் இனைந்து சீன துருப்புகளின் Moldon இராணுவப்படையும் இணைந்து, எல்லைப்பகுதியில் ஹட் பகுதியில் பிப்ரவரி 2016 அன்று நடைபெற்றது.

இந்த உடற்பயிற்சிக்கான காரணம் :

இந்தியா மற்றும் சீனாவின் எல்லைப் பகுதிகளில் இருநாடுகளும் சேர்ந்து அமைதியையும் நாட்டினை பராமரிக்கவும் ஒத்துழைக்கவும் உதவுகிறது.

தலைப்பு : அரசியல் விஞ்ஞானம் – நலவாழ்வு சார்ந்த அரசு திட்டங்கள்

ஸ்மார்ட் ரயில் நிலையங்கள்

ரயில்வே அமைச்சகம் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சகத்தின் ஸ்மார்ட் நகரங்களை கட்டமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்ததின் அடிப்படையில் ரயில் நிலையங்களிலும் ஸ்மார்ட் ரயில் நிலையங்கள் அமைக்க  கையெழுத்திடப்பட்டது.

முதன்முயற்சியாக 10 நகரங்களை ஸ்மார்ட் ரயில் நிலையங்கள்அமைத்திட இத்திட்டம் தேர்வு செய்துள்ளது. சராய் ரோஹில்லா (தில்லி), புபனேஸ்வர் (Bhubaneswwar, லக்னோ, வாரணாசி, ஜெய்ப்பூர், கோட்டா, தானே, மார்கோவா (கோவா), திருப்பதி மற்றும் புதுச்சேரி ஆகிய நகரங்கள் பட்டியலில் உள்ளன.

தலைப்பு : பொது நிர்வாகம் – பாதுகாப்பு அமைச்சகம்

ஐஎன்எஸ் திஹாயு (Tihayu)

இந்திய கடற்படை, கிழக்கு கடற்படையின் கட்டளை மையத்தில் அக்டோபர் 19-ம் தேதி ஐஎன்எஸ்  திஹாயு (Tihayu) முதன்முறையாக நியமித்தது.

ஐஎன்எஸ் திஹாயு பற்றி:

இது மிகவும் அதிவேகத் தாக்குதல்களையும் சமாளித்துக்கொள்ளகூடியதாகவும் கைவினை உள்ளது. அது ஆந்திராவின் விசாகபட்டின கடற்படை பொறுப்பின் கீழ் உள்ளது. அது கிழக்கு கடற்கரையின் கடலோர ரோந்து மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளில் நிலைநிறுத்தப்படும்.

ஐஎன்எஸ் திஹாயு, அந்தமான் நிக்கோபார் தீவின் குழுவில்லுள்ள திஹாயு தீவின் பெயரில் பெயரிடப்பட்டது. (தற்போது கச்ச தீவு என அழைக்கப்படுகிறது)

தலைப்பு : இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை – வெளிநாட்டு நாடுகளுக்கு இடையே இருதரப்பு உறவு

10 வது இந்திய மற்றும் அமெரிக்க வர்த்தக கொள்கை கருத்துக்களம்

வர்த்தக கொள்கை கருத்துக்களம், (Trade policy Forum) (TPF) இந்தியா மற்றும் அமெரிக்கா நாடுகளுக்கு இடையே அக்டோபர் 19 ம் தேதி புது தில்லியில் நடைபெற்றது. அது இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற்ற 10 வது TPF ஆகும்.

என்ன விவாதிக்கப்படுகிறது?

இந்த TPF-ல், அமெரிக்காவின் வளர்ச்சி மற்றும் தலையீடு உள்ள முக்கியமாக, பொருட்கள் மற்றும் சேவைகள், விவசாயம், உற்பத்தித் துறைகள் போன்ற பிரச்சினைகள், IPF போன்றவை பற்றி   ஆராயப்பட்டது.

குறிப்பு:

அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் டி.சி- யில்,  முந்தைய ஆண்டின் 9வது TPF அக்டோபர் 2015ல் நடைபெற்றது.

தலைப்பு : விளையாட்டு

ஐஓசி தடகள ஆணையம்

இந்திய பூப்பந்து விளையாட்டு வீரர் சாய்னா நேவால், சர்வதேச ஒலிம்பிக் குழுவின் (ஐஓசி) தடகள ஆணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐஓசி தடகள ஆணையத்தினை பற்றி :

அது நடப்பிலுள்ள விளையாட்டு வீரர்கள் மற்றும் ஐஓசியை இணைக்க சர்வதேச ஒலிம்பிக் குழுவின் ஆலோசனையின் கீழுள்ள அமைப்பு ஆகும்.

 ஐஓசி உறுப்பினர்கள் எப்படி தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்?

ஒலிம்பிக் விளையாட்டு வீரர்கலிள் இருந்து 12 உறுப்பினர்கள் எட்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த ஆணையம் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இந்த தேர்தல், விளையாட்டுகளில் பங்குபெறும் விளையாட்டு வீரர்கள் ரகசிய வாக்கு பதிவின் மூலம் நடைபெற உள்ளது.

[/vc_column_text][/vc_column][/vc_row]

Exit mobile version